Join SWF

Drop a Line

We’re Here to Help You

சேர்க்கை படிவம்

Pay Now
Before Proceeding upload payment screenshot

சிலம்பக் கலையின் - மகத்துவம்

  • உடற்பயிற்சிதான் - மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.
  • மனிதனுக்கு ஆபத்து எப்போது வரும் என்று தெரியாது.- அதனால் தற்காப்புக் கலையாகிய சிலம்பக்கலை பயிற்சி பெறுவது அவசியமாகிறது.
  • தற்காப்புக்கலை பயிற்சி என்பது பிறரை தாக்குவதற்கு அல்ல - தன்னையும் , தன்னை சார்ந்தவர்களையும் தற்காத்துக் கொள்வதற்கே.
  • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை - அனைவரும் வயது வரம்பு இன்றி தற்காப்புக் கலையான சிலம்பக் கலையை பயிலளாம் .
  • சிலம்பம் பயிற்சி ஒருவனுக்குள் - தன்னம்பிக்கையும், தன்னார்வத்தையும் ஏற்படுத்தக் கூடியது.
  • மனித இனத்தின் ஆற்றலையும், அறிவையும், வளர்த்து - ஒரு தனிமனிதனின் உடலையும், உள்ளத்தை ஒழுங்குப்படுத்தி - அவனின் உடலையும், உயிரையும் பாதுகாப்பதே இந்த உயர்ந்த உன்னதமான தற்காப்பு கலையான சிலம்பக் கலையின் மகத்துவமாகும்.
  • சிலம்பம் பள்ளியின் விதிமுறைகள்

    • சிலம்பம் பயிற்சி பெறுகின்ற மாணவ, மாணவிகள் ஒழுக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும், பணிவுடனும், நடந்துகொள்ள வேண்டும்.
    • சிலம்பம் பள்ளியை புனிதமாக மதித்து நடக்கவேண்டும்.
    • சிலம்பம் அல்லாத செயல்களில் பயிற்சி இடத்தில் ஈடுபடக்கூடாது.
    • ஒவ்வொரு பயிற்சி நாளும் தவறாமல் பயிற்சிக்கு வரவேண்டும். சிலம்பம் பள்ளிக்கு பயிற்சி நேரத்திற்கு 10 நிமிடத்திற்கு முன்னதாகவே வந்துவிடவேண்டும்.
    • சிலம்பம் பள்ளியில் சேர்ந்தவுடனே சிலம்பம் சீருடை சேர்ந்த 15 தினங்களில் வாங்கிவிட வேண்டும். சிலம்பம் சீருடை சிலம்பம் பள்ளியில் வழங்கப்படும்.
    • சிலம்பம் பள்ளிக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் நமது பள்ளியிலே வழங்கப்படும். வேறு இடத்தில் வாங்குவதற்கு அனுமதியில்லை.
    • சிலம்பம் பெல்ட், சிலம்பம் மற்றும் சீருடையை புனிதமாக பாதுகாப்புடன் வைத்திருக்கவேண்டும்.
    • சிலம்பம் பள்ளியில் கற்றுக்கொண்ட எந்த பயிற்சிமுறையையும் மாஸ்டரின் அனுமதியின்றி எவர் முன்னிலையிலும் செய்து காண்பிப்பதும், பயிற்சியளிப்பதும் கூடாது.
    • சிலம்பம் பயிற்சி இடத்தில் மாணவர்கள் மாணவிகளிடத்திலோ, மாணவிகள் மாணவர்களிடத்திலோ அவசியம் இன்றி பேசக்கூடாது.
    • சிலம்பம் பள்ளியில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் எக்காரணத்தைக் கொண்டும் வேறு சிலம்பம் பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெறக்கூடாது.
    • தவிர்க்கமுடியாத காரணத்தால் சிலம்பம் பயிற்சியை பாதியில் நிறுத்தும் சூழ்நிலை ஏற்பட்டால் தலைமை மாஸ்டரின் அனுமதி பெறவேண்டும்.
    • பயிற்சியை நிறுத்திய மாணவர்கள், நமது சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் நமது கிளைப்பயிற்சி இடங்களில் மட்டுமே சிலம்பம் பயிற்சியை தொடரவேண்டும். வேறு சிலம்பம் பயிற்சி பள்ளிகளில் தொடர அனுமதி இல்லை.
    • சிலம்பம் பயிற்சிக் கட்டணத்தை அந்தந்த மாதம் 10ம் தேதிக்குள் கட்டாயம் செலுத்திவிட வேண்டும்.